கில்லெட்டின் (guillotine) பிரெஞ்சுப் புரட்சியின் போது
கில்லெட்டின் (guillotine) பிரெஞ்சுப் புரட்சியின் போது
பிரான்சின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. இச் சூழ்நிலையில் அது வெளிநாடுகளுடன் போர்புரியவேண்டியது தவிர்க்க முடியாததானது. பிரஞ்சுப் புரட்சிக் காலத்தில் பிரான்சைவிட்டு வெளியேறியவர்கள் பிரான்சிற்கு எதிராகக் குறைகூற ஆரம்பித்தனர். பிள்ளிட்ஸ் அறிக்கையை (Declara-tion Pillitiz)வெளியிட்ட ஆஸ்திரியாவும், ரஷ்யாவும் ஐரோப்பிய மன்னர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் நாங்கள் தலையிடுவோம் என்று கூறினர். இதனால் பிரஞ்சு மக்களின் புண்பட்ட இதயம் வேல்கொண்டு பாய்ச்சியதைப்போல இருந்தது.

 1782ல்
போரின்பொழுது பிரஞ்சு மன்னர் இரகசியங்களை ஆஸ்திரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் தெரிவித்தார். அதனால் பிரான்ஸ் படைகள் தோல்வியடைந்தன. மக்கள் எதுவும் செய்யமுடியவில்லை. அச்சமயத்தில் பிரஞ்சுப் படைகளின் தளபதியான பிரன்ஸ்விக் கோமகன் ஓர் அறிக்கையை வெளியிட்டு, பிரான்சில் மீண்டும் மன்னரே ஆட்சிக்கு அமரவேண் டும் என்று கூறினார். அவரை எதிர்த்து 1792 ஆகஸ்டில் டாண்டன் தலைமையில் பிரான்சில் மீண்டும் கலகம் நடந்தது.

*செப்டம்பர் படுகொலை

டாண்டன் தலைமையில் நடந்த கலகத்தால் மன்னர் பதவி யிலிருந்து நீக்கப்பட்டு தேசிய கன்வென்ஷன் சபைக்குத் தேர்தல் நடந்தது புதிய அரசியலமைப்புச் சட்டம் பிறந்தது.டாண்டன் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். மன்னரின் ஆதரவாளர்கள் கொன்று குளிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் நான்கு நாட்களில் கொன்று குவிக்கப்பட்டனர். எங்கும் பிணக் குவியல்களே தெரிந்தன.

இச்சூழ்நிலையில் தேசநாட்டுப் படைகள் பாரீசை நோக்கி வந்தன. ஆனால் அவற்றை டாண்டன் எதிர்த்து வால்மி என்னு மிடத்தில் தோற்கடித்தார்.
 தேசிய கன்வெண்ஷன் சபை செப்டம்பர் 21-ல் உடனடியாகக் கூட்டப்பட்டது.

பிரான்சில் நடந்த தேசிய மாநாடு முடியாட்சியை ஒழிக்க வாக்களித்தது, இது பிரெஞ்சு முதல் குடியரசின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த முடிவு மாநாட்டின் முதல் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது, மேலும் குடியரசு அடுத்த நாள், செப்டம்பர் 22 வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், மாநாட்டின் செயல்கள் குடியரசின் முதல் ஆண்டிலிருந்து தேதியிடப்பட்டன. பிரெஞ்சுப் புரட்சியின் போது ஏற்பட்ட இந்த குறிப்பிடத்தக்க மாற்றங்களால், மற்ற பிரெஞ்சு நகரங்களைப் போலவே லியோனும் பாதிக்கப்பட்டது.

1792 முதல் 1795 வரை செயல்பட்ட தேசிய கன்வென்ஷன் சபை மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, அவரது செயல்களைக் கண்டித்து அவரைக் கொன்றுவிடவேண்டும் என்றது. 1793 ஜனவரி 21-ல் மன்னர் கொல்லப்பட்டார்.

*கில்லெட்டின் (guillotine) 
மாந்தரின் தலையை வெட்டிக் கொன்று மரண தண்டனை நிறைவேற்றப் பயன்படும் எந்திரம். 

இதில் ஒரு உயரமான செங்குத்தான சட்டத்தில் ஒரு கூர்மையான கத்தி தொங்கிக் கொண்டிருக்கும். அதன் அடியில் உள்ள பலகையில் தண்டனை விதிக்கப்பட்டவரைக் கட்டி வைப்பர். அவரது கழுத்து கத்தி முனைக்கு நேர் கீழே இருக்கும். கத்தியை அவிழ்த்து விட்டால் வேகாகக் கீழிறங்கி அவரது கழுத்தில் பாய்ந்து தலையை உடனே துண்டித்து விடும்.
பிறகும்(16 அக்டோபர் 1793) கில்லெட்டின் மூலம் பிரெஞ்சு அரசி மரீஅண்டோனெய்ட்டின் தலை துண்டிக்கப்படுகிறது 
பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரான்சில் கில்லட்டினின் பயன்பாடு பரவலானது. விரைவாக மரண தண்டனையை நிறைவேற்றும் எந்திரமொன்று தேவைப்பட்டதால் கில்லட்டின் வடிவமைக்கப்பட்டது. புரட்சிகர பிரான்சில் மரண தண்டனை வழிமுறைகளை சீர் திருத்தில் ஜோசப்-இக்னேஸ் கில்லட்டின் எனும் மருத்துவரின் பெயரால் இவ்வியந்திரங்கள் "கில்லட்டின்" என்று அழைக்கப்பட்டன. கில்லட்டின்கள் வெகுஜன நினைவிலும் பரவலர் ஊடகங்களிலும் பிரெஞ்சுப் புரட்சி, பயங்கர ஆட்சி போன்றவற்றுடன் பெரிதும் தொடர்பு படுத்தப்படுகின்றன (எனினும் பிரான்சில் 1981 மரண தண்டனை ஒழிக்கப்படும் வரை அது பயன்படுத்தப்பட்டு வந்தன.)

 நாட்டில் புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தவும் சமூக சீர் திருத்தங்கள் செய்யவும் அன்று சபை விரும்பியது.

மன்னரின் மரணம் பிற ஐரோப்பிய நாடுகளைக் கலக்கியது ஆஸ்திரியா, இங்கிலாந்து, ஹாலந்து, ஸ்பெயின் ஆகியன அன்று ஒன்று சேர்ந்து பிரான்ஸ் மீது படையெடுத்தன. கார்னெட் தலைமை யில் பிரான்ஸ் அப்படைகளைத் தோற்கடித்தது.

 சீர்திருத்தங்கள்

பொது நலக்குழு அமைக்கப்பட்டது; அதற்குத் துணையாக பொது காப்புக்குழு, புரட்சி நீதிமன்றம் ஆகியன இருந்தன இருப்பினும் பயங்கர ஆட்சி நடை பெற்றது.
 அதனால் 5,000 க் கும் அதிகமான எதிரிகளின் தலைகள் வெட்டப்பட்டன.
 கட்டாய இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. சொத்துக்கள் குழந்தைகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. மெட்ரிக் அளவு முறை கொண்டுவரப்பட்டது. புதிய வருடக்கணக்குமுறையில், வாரத்திற்கு பத்து நாட்கள் எனப்பட்டது.

புரட்சியின் பொழுது வெளியேறியவர்களின் சொத்துக்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டன. பல கல்வி நிறுவனங்களும், நூலகங்கள் திறக்கப்பட்டன. புரட்சி நீதிமன்றம் அமைக்கப் பட்டு ஐந்து நீதிபதிகள் அமர்த்தப்பட்டனர், பிரான்ஸ் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் புரட்சிக்குழு அமைக்கப்பட்டது. பொதுப் பாதுகாப்புக்குழு சந்தேகத்திற் குரியவர்களைக் கைது செய்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது 

குடியரசின் புதிய
ஆட்சியாளர்களுக்கிடையே அதிகாரப்
போட்டிகள் மிகுந்து பிரான்சு 1793 இல்
மேக்சிமிலியன் ரோபெஸ்பியரின்
சர்வாதிகாரப் பிடியில் சிக்கியது. 1794 இல் ரோபெஸ்பியர் கொல்லப்பட்ட பின் அவரது
பயங்கர ஆட்சி முடிவுக்கு வந்தது. 
பின் 1799
வரை டைரக்டரேட் என்ற அமைப்பு பிரான்சை ஆண்டது. அதற்குப் பின் நெப்போலியன் பொனபார்ட் ஆட்சியைக் கைப்பற்றிச் சில
ஆண்டுகளில் தன்னைத் தானே பிரான்சின்
பேரரசராக அறிவித்துக் கொண்டார்.