தூஷிக்கிற ஆவி பரிசுத்த வேதாகம் விளக்கம்
தூஷிக்கிற ஆவி பரிசுத்த வேதாகமம் விளக்கம்மகா உபத்திரவ காலத்தில் ஒரே ஒரு மதமும் ஒரே விதமான வழிபாட்டு முறைமையும் இருக்கும். பூமியில் வசிக்கிறவர்கள் அந்திக்கிறிஸ்துவையும் வலுசர்ப்பத்தையும் வணங்குவார்கள்.
சாத்தான் மனிதன் தன்னை ஆராதிக்க வேண்டும் என எப்போதும்  இன்றைக்கும் அவன் உரிமை கொண்டாடுகிறான். கிறிஸ்து வனாந்தரத்தில் இருந்தபோது அவரும்கூட தன்னைப் பணிந்து கொள்ள வேண்டும் என்று கூறினான் (மத். 4:8,9). 
இப்போதும் கூட அவனது தீர் மானம், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ அவை எல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துவதும், தன்னைத் தான் தேவனென்று காண்பிப்பதும் ஆகும் (II தெச.2:4). கிறிஸ்துவும் பூமியின் குடிகளும் தன்னை வணங்க வேண்டுமென்பது சாத்தான் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் ஆசையாகும். எனினும் ஜெயங்கொண்ட சபையும் பரிசுத்த ஆவியும் பூமியில் இருக்குமட்டும் அவனால் தனது விருப்பத்தை நிறைவேற்ற முடியாது. ஆனால் ஜெயங்கொண்ட சபை எடுத்துக்கொள்ளப் பட்டவுடன், இப்பிரபஞ்சத்தின் தேவனும் இவ்வுலகத்தின் அதிபதியு மான அவன், எல்லா இராஜ்யங்களையும் ஒரேமத இயக்கமாகக் கூட்டிச்சேர்த்து, அவர்கள் தன்னை வணங்க வேண்டும் எனக் கட்டளையிடுவதற்கு, தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வான். இதை அவன் நிறைவேற்றும்படியாக, 'தேவனென்னப்படுவதெது வோ, ஆராதிக்கப்படுவதெதுவோ,' அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னைப் பெரியவனாகக் காண்பித்து, வன்முறையை உபயோகிப்பான். அவனைப் பணிந்துகொள்ள மறுப்பவர்கள் கொலை செய்யப்படுவார்கள். எனவே பூமியின் குடிகள், "மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம் பண்ணத்தக்கவன் யார்?" (அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள். வெளி 13:4)
என்று சொல்லுவார்கள்.

"பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும் நாற்பத்தி ரண்டு மாதம் யுத்தம் பண்ண அதற்கு அதிகாரங்கொடுக்கப் பட்டது. அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும் பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது" (வெளி. 13:5,6).

தங்கள் தூஷணமான ஜீவியத்தை விட்டுத் திரும்ப மறுத்த இமெனேயையும் அலெக்சந்தரையும் பவுல் சாத்தானுடைய கைகளில் ஒப்புக்கொடுத்தார் ( இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள். அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன். 
1 தீமோத்தேயு 1:20 ). 
மனுஷர் தூஷிக்கிறவர்களாயிருப்பார்கள் என்பது கடைசி நாட்களின் அடையாளங்களில் ஒன்றாகும்
 ( 2 தீமோத்தேயு 3:1-5 மேலும் கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. 
எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 

சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 

துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், 

தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்;). 
மகா உபத்திரவ காலத்தில், தேவனை உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிற யாவரையும் அழிக்கிறதற்கும், மற்றவர்களுக்குத் தூஷிக்கக் கற்றுக் கொடுக்கும்படியாகவும், அந்திக்கிறிஸ்து தன் வல்லமைக்குட்பட்ட அனைத்தையும் செய்வான். சாத்தான் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான் (யோவா. 8:44). அதின் தலைகளின் மேல் தூஷணமான நாமம், தேவனுக்கு விரோதமான தூஷணமான நினைவுகளால், அந்திக் கிறிஸ்துவின் மனதை நிரப்பி, பெருமையானவைகளையும், தூஷணங்களையும் பேசும் வாயை அவனுக்குக் கொடுப்பது வலுசர்ப்பமே. அந்திக்கிறிஸ்து ஏற்ற காலத்தில் நியாயந்தீர்க்கப் படும்படி, நாற்பத்திரண்டு மாதம் அல்லது மூன்றரை வருடம் அவன் அவ்வாறு தூஷிக்கும்படி தேவன் அவனுக்கு இடங் கொடுப்பார். "கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலை செய்யப்படவேண்டும்" (லேவி. 24:16) என்று தேவனுடைய வசனம் கூறுகிறது. தூஷிக்கிற ஆவியினின்று நீங்கலாயிருக்க தேவன் தாமே நமக்குக் கிருபை தருவாராக ஆமென்.

உங்கள் கருத்து வரவேற்கப்படுகிறது 
whatsapp எண் 9444193444