இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்
*குமரி அனந்தன் மறைவால் வாடும் சகோதரி தமிழிசை உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

*தமிழின்பால் பெரும்பற்று கொண்டவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் 

*ஏராளமான நூல்களையும் எண்ணற்ற மேடைகளையும் கண்ட அவரது தமிழால் நம் நெஞ்சங்களில் குமரி அனந்தன் என்றும் நிறைந்திருப்பார்

*தமிழே தன் மூச்சென தமிழ் திருப்பணிக்கு வாழ்ந்திட்ட குமரி அனந்தனுக்கு தகைசால் விருது வழங்கி பெருமை கொண்டோம்

*விருது வழங்கியபோது என் கையை இறுகப்பற்றி வாஞ்சையோடு உறவாடிய அவர் நினைவு என் கண்களில் கண்ணீர் பெருக்குகிறது

*நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமையை நிலைநாட்டிய பெருமை குமரி அனந்தனையே சாகும்

*காங்கிரஸ் பேரியக்கத்துக்காக தன்னை ஒப்படைத்துக் கொண்ட குமரி அனந்தன் மறைவு தமிழ்ச்சமூகத்துக்கு பேரிழப்பு

முதலமைச்சர் புகழாரம்
எங்கள் இல்லத்திற்கு வந்து எங்களோடு உறவாடி சாப்பிட்டு சந்தோஷத்தோடு சென்ற நாட்களை நான் மறக்க முடியாது 

என் தங்கையின் திருமணத்திற்கு வீட்டிற்கு வந்து வாழ்த்துவதற்கு எங்கள் வீட்டில் எங்களை சந்திக்க வந்த அந்த சமயத்தில் மூன்றாவது மாடியில் இருக்கும் எங்களுடைய வீட்டுக்கு ஏறும் போது என் கைகளை பிடித்து அவர் பேசிக் கொண்டு வந்த காலங்களை மறக்க முடியாது

எனது தகப்பனார் இலக்கிய செல்வர் திரு குமரி அனந்தன் மற்றும் அவருடைய நண்பர்கள் ஒன்றாக சென்னை மெரினா பீச்சிலே இரவு நேரத்தில் சந்திப்பது வழக்கம் அப்படி சந்திக்கின்ற அந்த சமயத்தில் அவருக்கு பிடித்தமான வேர்க்கடலை உப்புக்கடலை பட்டாணி ஆகிய பொருட்களையும் என் தகப்பனார் எடுத்துக்கொண்டு செல்வார் அவர் ஆசையாய் அதை சாப்பிட்டு மகிழ்வார் 

இலக்கியச் செல்வர் திரு குமரி ஆனந்தன் அவர் அவர்களுடைய அந்த மணி விழா காலத்தில் நான் அவருக்கு கொடுத்த அந்த பரிசுத்த வேதாகமம் அதை அவர் வாசித்து பல திருமணங்களுக்கு செல்லும் பொழுது கானாவூர் கல்யாணத்தை பற்றி அவர் பேசியிருக்கிறார் 

தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கவர்னராக பொறுப்பேற்ற பிறகு இலக்கியச் செல்வர் குமரி ஆனந்தன் அவர்களோடு நான் பேசிய சமயத்தில் அவர் அவருடைய வீட்டுக்கு என்னை அழைத்ததை நான் மறக்க முடியாது
93 வயதில் நல்ல ஞாபகம்.
தனது நண்பனுடைய மகன் என்று என்னிடம் அநேக முறை தொலைபேசியில் நாங்கள் பேசியிருக்கிறோம் அவ்வளவு ஏழ்மையான குணம் உடையவர்