*முதல் வார்த்தை
பிதாவே, இவர்களுக்கு மன்னியும்,
அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
லூக்கா 23:34
*இரண்டாம் வார்த்தை
இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 23:43
*மூன்றாம் வார்த்தை :
அதோ, உன் மகன் ,அதோ, உன் தாய் என்றார்.
அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.
யோவான் 19:26
பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
யோவான் 19:27
*நான்காம் வார்த்தை :
ஏலி! ஏலி! லாமா சபக்தானி,
ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார், அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மத்தேயு 27:46
*ஐந்தாம் வார்த்தை
தாகமாயிருக்கிறேன்.
அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.
யோவான் 19:28
*ஆறாம் வார்த்தை
முடிந்தது.
இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
யோவான் 19:30
* ஏழாம் வார்த்தை
பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்
இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார், இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
லூக்கா 23:46
போதகர் P.பால் எபநேசர்
ஜெப உதவிக்கு +919444193444