பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்
9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய
சுனிதா வில்லியம்ஸ், வில்மோர்
இரண்டு விண்வெளி வீரர்களும் ஜூன் 2024 முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தனர். அவர்களின் பயணம் 8 நாட்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விண்கலத்தில் ஹீலியம் கசிவு ஏற்பட்டதால் அவர்கள் ஒன்பது மாதங்கள் விண்வெளி நிலையத்தில் தங்க வேண்டியிருந்தது.
அவர்களை அழைத்துவர அனுப்பப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம், நேற்று அதிகாலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டது. இந்திய நேரப்படி காலை 10:35 மணிக்கு விண்வெளி நிலையத்திலிருந்து இந்தப் பயணம் ஆரம்பமானது.
விண்கலம் விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து செல்வதைக் காட்டும் வீடியோவை நாசா பகிர்ந்திருந்தது. 17 மணி நேரம் பயணித்து பூமி வந்தடைந்த Dragon
இந்திய நேரப்படி மார்ச் 19 அன்று அதிகாலை 3:27 மணிக்கு ஃப்ளோரிடா கடற்கரை அருகே உள்ள கடலில் அவர்கள் விழுந்தனர். இதையடுத்து, விண்கலத்தில் இருந்த அனைத்து பயணிகளின் மீட்கப்பட்டு அவர்களுக்கு உடல்நலப் பரிசோதனை நடத்தப்பட்டது.
சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேர் பத்திரமாக தரையிறங்கினர்