தேவனின் பரிபூரணம்
===================
நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள
விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று.
1 தீமோத்தேயு 1:14
இந்தக் குறிப்பில் பரிபூரணம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி , எவையெல்லாம் தேவனின் பரிபூரணம் என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம்
1. பரிபூரண கிருபை
அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
யோவான் 1:16
அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிகநிச்சயமாமே.
ரோமர் 5:17
2. பரிபூரண நன்மை
உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.
உபாகமம் 28:11
அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருக ஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்.
உபாகமம் 30:9
3. பரிபூரண சமாதானம்
இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.
எரேமியா 33:6
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக
யோவான் 14:27
4. பரிபூரண ஈவு
அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிகநிச்சயமாமே.
ரோமர் 5:17
5. பரிபூரண ஜீவன்
திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
யோவான் 10:10
6. பரிபூரண சித்தம்
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
ரோமர் 12:2
7. பரிபூரண ஆனந்தம்
ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர், உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு.
சங்கீதம் 16:11
மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன். உங்களைக் குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன், எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்.
2 கொரிந்தியர் 7:4
8. பரிபூரண ஆசீர்வாதம்
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்:
நீதிமொழிகள் 28:20
உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்,
மத்தேயு 13:12
மத்தேயு 25:29
9. பரிபூரண இயல்பு
அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
எபேசியர் 3:19
சகல பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கவும்,
கொலோசெயர் 1:19
10. பரிபூரண தேவத்துவம்
ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.
மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.
கொலோசெயர் 2: 9,10
11,பூரணவடிவு
பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.
சங்கீதம் 50:2
சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன், உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம்.
சங்கீதம் 119:96
உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
ஏசாயா 26:3
இந்த வார்த்தையின்படி தேவனுடைய பரிபூரணம் என்னென்ன என்பதை இந்தக் குறிப்பில் நாம் சிந்தித்தோம். அவருடைய பரிபூரணத்தால் நாம் கிருபையின் மேல் கிருபை பெற்றிருக்கிறோம். அவருடைய பரிபூரணம் நம் யாவருக்கும் கிடைப்பதாக !
கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக
ஆமென் !
Please share and subscribe to our Youtube channel
https://youtube.com/shorts/5l_8gVwnlU8?si=-2eBtr4fECb5Qqc9
God bless you
ஜெப உதவிக்கு 9444193444