(அப்போஸ்தலர் 13:43)
*என்ன கிருபை? ஆதி சபையில் அப்படி என்ன கிருபை இருந்தது?
நாம் இன்று கிருபை கிருபை என்று சொல்லிக் கொள்கிற கிருபையல்ல. விசேஷ கிருபை இருந்தது. நமக்கும் அப்படிப்பட்ட கிருபை வேண்டும்.
1. சாதகமற்ற சூழலில் சுவிசேஷம் அறிவிக்கும் கிருபை
ஸ்தேவான் நிமித்தம் வந்த உபத்திரவத்தால் சீப்பிரு, சீரேனே போன்ற பட்டணத்தில் உள்ள எல்லா கிறிஸ்தவர்களும் அந்தியோக்கியா பட்டனத்திர்க்குள் வந்து கீரேக்கருடன் தர்க்கம் செய்து இயேசு கிறிஸ்துவை குறித்து பிரசங்கம் செய்தார்கள்.
கிருபையின் இரகசியமாக இருக்கும் இயேசு கிறிஸ்துவை குறித்து யாரெல்லாம் சாதகமற்ற சூழலில் சுவிசேஷம் அறிவிக்கிறார்களோ அவர்கள் நடுவில் கிருபை இருக்கின்றது.
அப்போஸ்தலர்களை கவனித்து பார்த்தால் அவர்களை மிரட்டி, பயமுறுத்தி, அடித்து, காயப்படுத்தி இந்த இயேசு கிறிஸ்துவை குறித்து மட்டும் பிரசங்கம் செய்ய கூடாது என்று சொன்னார்கள். ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்து குறித்தும் அவரது உயிர்த்தெழுதல் குறித்தும் சுவிசேஷம் அறிவிக்க அவர்கள் மேல் பூரண கிருபை இருந்தது.
எனவே கிருபைக்கு சொந்தமான இயேசு கிறிஸ்துவை எந்த சமயத்திலும் சாதகம் இருக்கின்றதோ இல்லையோ யாரெல்லாம் சுவிசேஷம் அறிவிக்கிறார்களோ அவர்கள் மேல் கிருபை இருக்கும்.
அந்த சபையில் கிருபை இருக்கும்.
அந்த குடும்பத்தில் கிருபை இருக்கும்.
2. சாதகமற்ற சூழலில் ஜெபிக்கும் கிருபை அந்தியோக்கியா சபை ஜெபிக்கும் சபை. உபவாசிக்கும் சபை.
ஆதி சபையில் ஊக்கமாக ஜெபிக்கும் கிருபை இருந்தது. சுவிசேஷம் அறிவிக்க தடைகள் பெருகும் போதும், கைது செய்த போதும் அவர்களுக்கு தெரிந்த ஒரே ஒரு காரியம் ஜெபிப்பது மட்டும்.
அப்போஸ்தலர் 12:6..
பேதுரு சிறைச்சாலையில் காக்கப் பட்டு இருக்கையில் ஜெபித்தார்கள். பேதுரு நித்திரை செய்துக் கொண்டு இருந்த போதும் ஜெபிக்கும் கிருபை பெற்ற விசுவாசிகள் ஜெபித்த போது சிறைச்சாலை கதவுகள் தானாக திறந்தது. எந்த சபையில் விண்ணப்பத்தின் ஆவி இருக்கின்றதோ அந்த சபையில் கிருபை இருக்கின்றது. நிந்திக்கப்பட்டும் அவமானப்பட்டும் அடிக்கப்பட்டும் இருந்தும் பிதாவே உமது பிள்ளையாகிய இயேசு கிறிஸ்துவை குறித்து தைரியமாக பிரசங்கம் செய்ய அனுக்கிரகம் செய்யும் என்று ஜெபித்த போது அவர்கள் கூடி இருந்த இடம் அசைந்தது. இது தான் தேவ கிருபை.
3. சாதகமற்ற சூழலில் கர்த்தரை ஆராதிக்கும் கிருபை* அந்தியோக்கியா சபை நன்றாக ஆராதிக்கும் கிருபை பெற்ற சபை. ஏது இல்லாதிருந்தும், சரீரம் செத்து இருந்தும் கர்த்தரை முழு நிச்சயமாக நம்பி துதித்து ஆபிரகாம் தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனாக மாறினார். எல்லா நன்றாக இருக்கும் போது ஆராதனை நடத்தும் ஆராதனை வீரர்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை. சாதகமற்ற நெருக்கடி சூழலில் தேவனை விசுவாசித்து அவர் யார் என்பதை அறிந்து அவரை ஆராதிக்கும் போர் குணம் கொண்ட வீர்கள் தான் இன்றைய சபைக்கு தேவை அங்கே தான் கிருபை இருக்கும்.
பவுலும் சீலாவும் (அப்போஸ்தலர் 16:25..)கைகள் கட்டப்பட்ட நிலையில் கர்த்தரை அந்த நெருக்கடியான சாதகமற்ற சூழலிலும் துதித்தார்கள் கர்த்தர் சிறைச்சாலையை அசைத்தார்.
அங்கே தான் கிருபை வெளிப்பட்டது. தேவனுக்கு மகிமை கொடுக்காத எரோதுவை ஒரே நிமிடத்தில் அசைக்கும் ஆராதனை.
*தெய்வீக ஆராதனை இருக்கும் இடத்தில் தான் மெய்யான கிருபை இருக்கும்.
4. சாதகமற்ற சூழலில் கொடுக்கும் கிருபை முழு உலகில் ஏற்பட்ட பஞ்சத்தில் ஜெருசலேம் சபையை போசிக்க இந்த அந்தியோக்கியா சபை தான் முதல் முதலில் தர்ம பணம் சேகரித்து பர்ணபா மற்றும் பவுலின் கைகளில் கொடுத்து விட்டது. எல்லாம் இன்றைக்கு நம் கைகளில் கிடைக்கபெற்ற போது கூட நம்மால் கொடுக்கும் மனசு வர வில்லை. அப்படி பெற்றுக் கொள்வதை கிருபை என்று பீலா விடும் நாம் நெருக்கடியான நேரத்தில் சாதகமற்ற சூழலில் கொடுக்கும் நபரிடம் தான் சபையிடம் தான் கிருபை இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது தான் இயேசு கிறிஸ்துவின் கிருபை. தான் எல்லா மகிமை பெற்று இருந்தும் தன்னை வெருமையாக்கி கொடுத்தாரே அங்கே தான் மெய்யான கிருபை வெளிப்பட்டது.
5. சாதகமற்ற சூழலில் மிஷனரிகளை அனுப்பும் கிருபை இந்த சபையில் இருந்து தான் முதன் முதலில் பர்ணபா மற்றும் பவுலை கர்த்தர் பிரித்து எடுத்த ஊழியத்திற்காக அதாவது மிஷனரி ஊழியத்திற்காக பிரித்து எடுத்தார்கள். அனுப்பினார்கள். ஊழியம் முடித்து திரும்பி வந்தார்கள். மறுபடியும் புறப்பட்டார்கள்.
இந்த கிருபை இருக்கும் சபைகள் தான் பாக்கியமுள்ளது. எங்கேனும் உண்டா?
6. சாதகமற்ற சூழலிலும் அதிக ஊழியர்களை தன்னகத்தே பெற்ற கிருபை இந்த சபையில் தான் பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லுகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், அகபு பொன்ற பலர் தீர்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள். அதிக ஊழியர்கள் ஒற்றுமையாக ஊழியம் செய்த சபை.
ஒரு சபையில் அனைத்து விதமான ஊழியர்களும் ஊழியங்களும் இருந்தால் அங்கே தான் கிருபை மேல் கிருபை பெருகும். யாரையும் தன்னோடு ஊழியர்களாக சேர்க்க மன நிலை இல்லாத இடத்தில் எப்படி கிருபை இருக்கும்?
சகோதரர் ஒருமித்து வாசம் செய்யும் இடத்தில் தான் கிருபை. பரிசுத்தவாங்களின் ஐக்கியத்தில் தான் கிருபை இருக்கும்.
7. சாதகமற்ற சூழலிலும் துல்லியமாக தீர்க்கத்தரிசனம் சொன்ன அகபுவின் கிருபை இந்த சபைக்குள் கிருபாவரம் சரியாக செயல் பட்டது. யோசேப்பை கர்த்தரின் வார்த்தை புடமிட்டது. அது தான் கிருபை. அங்கே தான் கிருபை வெளிப்படும். புடமிடப்பட ஒப்புக் கொடுக்காத எந்த மனிதனாலும் கிருபை உள்ள தரிசனங்கள் வெளிப்படாது. ஏனெனில் தீர்க்கதரிசனம் ஒருக்காலும் மனித சுயத்தில் வருவது அல்ல. அது பரிசுத்த மனிதர்களால் பரிசுத்த ஆவியினால் பேசப்பட்ட ஒன்று. அந்த கிருபை அந்தியோக்கியா சபையில் இருந்தது.
*நாம் சொல்லும் கிருபை எப்படிப் பட்டது? கொஞ்சம் சோதித்து பார்க்க வேண்டும். *தேவ கிருபை எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்ள விடாது.
*விலைக் கிரயம் கொடுக்க வைக்கும். *தேவ கிருபை பிராயாசப்பட வைக்கும், *தேவ கிருபை பலவந்தம் செய்ய பண்ணும்,
*தேவ கிருபை நெருக்கி ஏவும்,
*தேவ கிருபை பாடு பட வைக்கும்,
*தேவ கிருபை தேவ சித்தம் செய்ய தூண்டும்.
அந்த கிருபை எல்லாம் அன்றைய அந்தியோக்கியோ சபை மற்றும் ஆதி சபைகளில் இருந்தது. அதினால் தான் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைக்க பட்டார்கள்.
சாதாரணமான நிலையில் இருந்து நம்மை அசாதாரணமான நிலைக்கு கொண்டு செல்வது தான் தேவ கிருபை.
அந்த கிருபை நமது சபைகளில் பெருகட்டும்.
நமது குடும்பத்தில் பெருகட்டும்.
சும்மா கிருபை கிருபை என்று கிருபையை போக்கடித்து, விருதாவாக்கி அதை இழந்து போகாமல் நெருக்கடியான சாதகமற்ற சூழலிலும் வெளிப்படும் தேவ கிருபையை தரும் கிறிஸ்துவில் அவரது கிருபையில் பெலப்படுவோம். இயேசு கிறிஸ்து சீக்கிரம் வருகின்றார்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
1 தெசலோனிக்கேயர் 5:28