Rapido ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Rapido மதுரையில்,..ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

 கடந்த வாரமே சுமார் 40-க்கும் மேற்பட்ட ரேப்பிடோ பைக்குகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த பைக்குகளுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ரேப்பிடோவில் பைக் ஓட்டும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரேப்பிடோவில் இயங்கும் பைக்குகளை பறிமுதல் செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்படும் பைக்குகளுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரையில் அனுமதி பெறாமல் இயங்கிய ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சுமார் 2000 பைக்குகளை உறுப்பினர்களாக்கி இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது