Today NewsFebruary/1/2023
*அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டு மக்கள் கடமையில் கவனமாக இருக்க வேண்டும் 
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31/1/2023 (செவ்வாய்கிழமை) தொடங்கியது. இதை முன்னிட்டு நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், அரசின் திட்டங்கள் குறித்தும், அதனால் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். வளர்ந்த நாடாக இந்தியா மாற அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டு மக்கள் கடமையில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
* சென்னையில் தவறான பாதையில் வாகனம் ஒட்டியதற்காக

(30.1.2023. திங்கள்) ஒரு நாளில் மட்டும் 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 763 வழக்குகளுக்கு அபராத
தொகையாக ரூ.3,81,500
வசூலிக்கப்பட்டதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்தும் வகையில், போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.