உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு ஊர்களின் பெயர்கள் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் இருக்கும் முகலாய தோட்டம் இப்போது அம்ரித் உதயன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
75வது இந்தியா சுதந்திர தினத்தையொட்டி அசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற கருப்பொருளில் கொண்டாடியது.
நாட்டு மக்களின் கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் மகத்தான வரலாற்றை கொண்டாடுவதற்கும் இந்த கருப்பொருளை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
இந்த நிலையில் அசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தான் தற்போது டெல்லி ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள முகல் தோட்டத்தின் பெயர் 'அம்ரித் உதயான்' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் முகாலயர்கள் பெயரில் இருக்கும் இடங்கள், முக்கியமான ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன.