கர்த்தர் நமக்கு உதவி செய்வாரா மாட்டாரா??
கடலின்மேல் நடக்கும் முன்னர், பேதுருவுக்கு என்ன நடந்தது என்று யோசித்துப் பாருங்கள். புயல்காற்று அடித்ததாலோ பெரிய அலைகள் வந்ததாலோ பேதுரு தண்ணீரில் மூழ்கவில்லை. அதைப் பார்த்து பயந்துபோனதால்தான் அவர் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தார் என்று வேதம் சொல்கிறது. (மத். 14:24-32) பேதுரு தண்ணீரில் நடக்கும்போது, இயேசுவைப் பார்ப்பதற்குப் பதிலாகப் புயல்காற்று எவ்வளவு பலமாக அடிக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தார். அதனால்தான், அவருடைய விசுவாசம் குறைய ஆரம்பித்தது. நாமும் நம்முடைய பிரச்சினைகளையே யோசித்துக்கொண்டு இருந்தால் கர்த்தர் நமக்கு உதவி செய்வாரா மாட்டாரா என்று சந்தேகப்பட ஆரம்பித்துவிடுவோம். நம்முடைய விசுவாசம் குறைய வாய்ப்பு இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
யோபு தன் நிலையை சாட்சியாகவே சொல்லியிருக்கிறார். நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் தன் வாழ்வில் ஏதாவது புயல் வீசுமோ, இழப்பு நேரிடுமோ என்று பயந்ததாக சொல்லுகிறார். தான் பயந்தது நேரிட்டதாக நமக்குத் தெரிவிக்கிறார். அது நாம் எதற்கும் பயப்படக்கூடாது என்று அறிவுறுத்துவது ஆகும்.
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். (சங்கீதம் 56:3) என்று சங்கீதக்காரர் சொல்வதைப் பாருங்கள்! எந்த நேரத்தில், எவ்வித பயம் ஏற்பட்டாலும் "பயப்படாதே!" என்று தைரியப்படுத்தின தகப்பனை நினைப்போம். விசுவாசத்தில் வளர்வோம்! கர்த்தர் நமக்கு உதவி செய்வார் சகலமும் அவர் சமூகத்தில் பார்த்துக்கொள்ளப்படும்! ஆமென்!
கர்த்தர் நமக்கு உதவி செய்வாரா மாட்டாரா??