ebi news
           அதிமுக
தற்போது இருக்கும் இடம் கூட இல்லாமல் போய்விடும்...கி.வீரமணி  

  திராவிட கழக தலைவர்  கி.வீரமணி தனது 89-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை அவரது இல்லத்திற்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கி.வீரமணி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக தொடர வேண்டும் என ஓபிஎஸ் கூறியிருப்பது அண்ணாவிற்கு செய்யும் துரோகம். அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு இனியும் அண்ணாவிற்கு களங்கம் கற்பிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தை 1-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என கலைஞர் அறிவித்ததை, ஜெயலலிதா வீம்புக்கு மாற்றினார். ஜெயலலிதா செய்த அதே தவறை இப்போதும் அதிமுக செய்தால் தற்போது இருக்கும் இடம் கூட இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்தார்.