திமுக முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன். 80 வயதாகும் இவர் கருணாநிதியின் உதவியாளர் மட்டுமின்றி நெருங்கிய நண்பராகவும் பார்க்கப்பட்டார்.
உடலநலக்குறைவு, வயோதிகம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று காலமானார். கடந்த சில மாதங்களாகவே இவர் உடல்நிலை மோசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சண்முகநாதன் மருத்துவமனையில் இருந்த போதே முதல்வர் ஸ்டாலின் அவரை இரண்டு முறை சென்று சந்தித்தார். அதேபோல் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் சண்முகநாதனை மருத்துவமனையில் நேரில் சென்று ஒருமுறை சந்தித்தார். இந்த நிலையில் அவரின் மரண செய்தி கேட்டதும் நேற்று மாலையே முதல்வர் ஸ்டாலின் சண்முகநாதன் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
தனது தந்தைக்கு எல்லாமுமாக இருந்த அவரின் உதவியாளர் சண்முகநாதனின் உடலை பார்த்த முதல்வர் ஸ்டாலின் அங்கேயே உடைந்து போய் கண்ணீர்விட்டார். அவரின் முகத்தையே பார்த்தபடி கண்ணீர்விட்டுக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் நின்றார். அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்பும் அங்கிருந்து செல்ல மனமின்றி நீண்ட நேரம் கண்ணீர்விட்டபடி நின்றார்.
முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி