டெங்கு காய்ச்சல் தடுக்க ..பப்பாளி இலை..
பப்பாளிச் இலையில் இருந்து தயாரிக்கப்படும் சாறு டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்லாமல், அதைக் குணப்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரத்த பிளேட்லெட்டுகளை மேம்படுத்த பப்பாளி இலைகளை பயன்படுத்தலாம்.
பப்பாளி இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து நன்கு கழுவிய பின் சிறிது காய வைக்கவும். அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி, 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, பாதியாக குறையும் வரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக குறைந்ததும், அதனை வடிகட்டி, குடிக்கலாம்.
பழுத்த பப்பாளி பழத்தை தினமும் சாப்பிடுவதோடு, ஒரு கிளாஸ் பப்பாளி சாற்றில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து, சுவையை அதிகரிக்கும்ஃ மேலும் வைட்டமின் சி அதிகளவு கிடைக்கும். இந்த சாற்றை ஒரு நாளைக்கு குறைந்தது 2-3 முறையாவது குடிக்க வேண்டும் மேலும் இது 'டெங்கு காய்ச்சலை விரைவாக குணப்படுத்தும்.
சில பப்பாளி இலைகளை எடுத்து நசுக்கவும், அதில் இருந்து சாறு எடுத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும். இவ்வாறு குடிக்கும்போது இரத்தத்தில் ப்ளேட்லேட் எண்ணிக்கை மேம்படும் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் பெரிய நன்மைகளை கொடுக்கும்.
பப்பாளி காயில் அதிகபடியான விட்டமின் A உள்ளது.
பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகளை உண்டாலோ, சாறை அருந்தினாலோ, குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வயிற்றிலிருந்து வெளியேறும்.
பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதியை முகப்பரு உள்ளவர்கள், மென்மையாக முகத்தில் தேய்த்து கழுவினால் பருக்கள் குறைந்து தழும்புகள் நீங்கும். முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவையும் கூட்டும்.
அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர 1 மாதத்தில் குண்டான உடல் படிப்படியாக மெலியும். பப்பாளியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளி காயை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், இது உடலில் இரத்த குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.