தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் 5875 பேர் பாதிப்பு. ஒரே நாளில் 98 பேர் மரணம் ...

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 58505 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 5875 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 2779062 பேருக்கு தொற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 257613 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 60344 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.


*நேற்று ஒரே நாளில் 98 பேர் மரணம் அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4132 ஆக உயர்ந்துள்ளது. 


*அதிபட்சமாக சென்னையில் நேற்று 17 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், கோவையில் 7 பேரும், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மற்றும் விருதுநகரில் தலா 6 பேரும், தென்காசியில் 4 பேரும், காஞ்சிபுரத்தில் 5 பேரும், கன்னியாகுமரியில் 4 பேரும் மரணம் அடைந்தனர். ராணிப்பேட்டையில் 3 பேரும், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டத்தில் தலா 2 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


*தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து இன்று ஒரே நாளில் 5,517 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,96,483 ஆக உயர்ந்துள்ளது.


*தமிழகத்தில் அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு ஒரே அளவாக 5 ஆயிரத்திற்கு மேல் என்கிற அளவிலயே உள்ளது. குணம் அடைவோர் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட அதே அளவிலேயே உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 56,998 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.