பெரியார் சிலை மீது காவி பூசி அவமதித்ததாக கைது செய்யப்பட்ட அருண் கிருஷ்ணனை குனியமுத்தூர் காவல்துறையினர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில் அருண் கிருஷ்ணன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
கோவையில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றிய அருண் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார். பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமதித்தவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி உள்ளனர். பெரியார்சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை அறிந்து அப்பகுதியில் திக மற்றும் திமுகவினர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெரியார்சிலை அவமதிப்பு தொடர்பாக ஒருவர் போத்தனூர் போலீசில் சரணடைந்தாா். சரணடைந்தவர் அருண் கிருஷ்ணன், பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளராக இருக்கிறார். அவர் மீது குனியமுத்தூர் காவல்துறையினர் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கந்த சஷ்டி கவசத்தை அவமதித்து கருப்பர் கூட்டம் வீடியோ பதிவிட்டதால் முருக பக்தராகிய தான் மனதளவில் புண்பட்டதாகவும், இதனையடுத்தே பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றியதாகவும் அருண் கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்தார்.