பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான சுஷாந்த் மும்பையிலுள்ள தனது இல்லத்தில் தற்கொலை

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையிலுள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதை மும்பை காவல்துறை உறுதிசெய்துள்ளது. எனினும், தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.


இந்த நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட தகவலை மும்பை காவல்துறையின் செய்தித்தொடர்பாளரான பிரானாய் அசோக் உறுதிப்படுத்தியுள்ளார்.


சுஷாந்தின் தற்கொலை பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் மூலம் பரந்துபட்ட ரசிகர்களுக்கு இவர் அறிமுகமானார். சமீபத்தில் 'சிசோரே' என்னும் பாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் சுஷாந்த்.


 


சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் முன்னாள் மேனேஜரான திஷா சாலியன் கடந்த திங்கட்கிழமை அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த செய்தி அறிந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் அதிர்ச்சி அடைந்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார். திஷாவின் மரண செய்தி அறிந்து அதிர்ந்துவிட்டேன். திஷாவின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் என்று சுஷாந்த் சிங் தெரிவித்திருந்தார்.