சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் தந்தை, மகன் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவையே ஒரு அசைவை உண்டாக்கியுள்ளது. . சகோ. மோகன் சி. லாசரஸ்..

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது : மோகன் சி.லாசரஸ் பேச்சு


 


சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பில் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது என்று சமூகவலைத் தளங்கள், உள்ளுர் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பான நாலுமாவடி திறப்பின் வாசல் ஜெபத்தில் மோகன் சி. லாசரஸ் பேசினார்.


 


தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடையக் கூடாரத்தில் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமை திறப்பின் வாசல் ஜெபம் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா கால ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் சமூக வலைத்தளங்கள், உள்ளுர் தொலைக்காட்சிகள், சேட்லைட் தொலைக்காட்சி சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த மாதமும் திறப்பின் வாசல் ஜெபம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.இதில் இந்திய தேசத்தின் பாதுகாப்பிற்காகவும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்காகவும், இந்திய தேசமக்கள் இரட்சிக்கப்படவும், எழுப்புதல் அக்னி போடப்படவும் பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது.


பின்னர் சரஸ் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் தந்தை, மகன் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவையே ஒரு அசைவை உண்டாக்கியுள்ளது. தகப்பன், மகன் மரணம் அந்த குடும்பத்தையே நிலைகுணிய வைத்து விட்டது. 2 ஆண்களும் இல்லாதது அந்த குடும்பத்தின் தாயாருக்கும், 3 சகோதரிகளுக்கும் ஆறுதல் கிடைக்க சிறப்பு பிரார்த்தனையை நாம் செய்ய வேண்டும். மனிதனுடைய வார்த்தை ஆறுதல் தரமுடியாது. இறைவன்தான் அந்த குடும்பத்திற்கு ஆறுதலும், பாதுகாப்பும் கொடுக்க வேண்டும். அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. தந்தை மகன் மரணம் குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.



காவல்துறையில் நல்லவர்களும், நேர்மையானவர்களும் உள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. அந்த குடும்பத்திற்கு நீதி கிடைத்திடவும், குடும்பத்தினர் சோகம், துக்கம் நீங்கி ஆறுதல் கிடைத்திடவும் இறைவனிடம் கருத்தாய் ஜெபிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசி சிறப்பு பிரார்த்தனையை அந்த குடும்பத்திற்காக ஏறெடுத்தார் சகோ. மோகன் சி. லாசரஸ்.