சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பென்னீஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது காவல்துறையினர் மிருகத்தனமாக நடந்து கொள்வது கொடூரமான குற்றம்.

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பென்னீஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆசன வாயில் லத்தியை விட்டு, கொடுமையான சித்ரவதைகளை எல்லாம் செய்து, அவர்களை ரத்தம் சொட்ட, சொட்ட போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 


ஜெயராஜ்- பெனிக்ஸ் மரணத்திற்கு ட்விட்டரில் பிரபலங்கள் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர்...



"காவல்துறையினர் மிருகத்தனமாக நடந்து கொள்வது கொடூரமான குற்றம். நமது பாதுகாவலர்கள் ஒடுக்குமுறையாளர்களாக மாறுவது சோகமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்