சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. ராகுல் காந்தி தனது டிவிட்டரில் நேற்று புள்ளிவிவர வரைபடம் ஒன்றை பகிர்ந்தார்.

கொரோனாவை மட்டுமல்ல, பெட்ரோல், டீசல் விலையையும் மோடி அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது,’ ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. ஆனால், கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு கடந்த 18 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து வருகிறது. இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் காந்தி, மத்திய பாஜ அரசை விமர்சித்துள்ளார்.


 


அவர் அதில், ஊரடங்குக்குப் பிறகு கொரோனா எண்ணிக்கை உயர்வது போல, பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்திருப்பதை காட்டுகிறது. அதோடு, ‘‘மோடி அரசு கொரோனா வைரசையும், பெட்ரோல், டீசல் விலையையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது’’ என கூறி உள்ளார்.