உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 78 லட்சத்து 72 ஆயிரத்து 619ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 32ஆயிரத்தை கடந்துள்ளது.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 21 லட்சத்து 42ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மட்டும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 527 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, பிரேசிலில் 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதித்துள்ள நிலையில் அங்கு, பலியானோர் எண்ணிக்கை 42ஆயிரத்து 791 ஆக உயர்ந்துள்ளது.
மூன்றாவது இடத்தை பிடித்த ரஷ்யாவில் 45 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 6 ஆயிரத்து 829 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில், 11 ஆயிரத்து 929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 3 லட்சத்து 20 ஆயிரத்து 922 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது தினசரி பலி எண்னிக்கை 30ஐ தாண்ட தொடங்கி உள்ளது
கடைசி நேரத்தில் மருத்துவமனையில் சேரும் நபர்கள் பலியாகிறார்கள்.
தமிழகத்தில் கொரோன மரணங்கள் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது .
தமிழகத்தில் தற்போது தினசரி பலி எண்னிக்கை 30ஐ தாண்ட தொடங்கி உள்ளது.நேற்று மட்டும் தமிழகத்தில் 30 பேர் பலியாகி உள்ளனர். இத்தனை நாட்கள் 20 என்ற எண்ணிக்கையில் பலி எண்ணிக்கை இருந்தது. ஆனால் தற்போது அது 30ஐ தொட்டு உள்ளது. இனி வரும் நாட்களில் இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கை மீறி செல்கிறது. நினைத்ததை விட அதிக எண்ணிக்கையில் கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் வர தொடங்கி உள்ளது. நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டது.
நேற்று தமிழகத்தில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனா காரணமாக 397 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.