தண்டையார்பேட்டையில் 5 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று.
அண்ணா நகர் மண்டலத்தில் ஒரே நாளில் 243 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது
தமிழகத்தில் ஜுன் 21-ம் தேதி உறுதி செய்யப்பட்ட 2,532 தொற்றுகளில், சென்னையில் மட்டும் 1,493 பேர் ஆகும். இதுவரை சென்னையில் மொத்தம் பாதித்துள்ள 41,172 பேரில், 22,887 பேர் குணமடைந்துள்ளனர். 601 பேர் உயிரிழந்துள்ளனர்.
தண்டையார்பேட்டையில் 5 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று.
அண்ணா நகர் மண்டலத்தில் ஒரே நாளில் 243 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
அண்ணா நகர் மண்டலத்தில் ஒரே நாளில் 243 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5116 ஆக அதிகரித்துள்ளது
தமிழகத்தில் ஜுன் 21-ம் தேதி உறுதி செய்யப்பட்ட 2,532 தொற்றுகளில், சென்னையில் மட்டும் 1,493 பேர் ஆகும். இதுவரை சென்னையில் மொத்தம் பாதித்துள்ள 41,172 பேரில், 22,887 பேர் குணமடைந்துள்ளனர். 601 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில், நேற்று கண்டறியப்பட்ட தொற்றுகளில் அதிகபட்சமாக, அண்ணாநகரில் 243 பேரும், தேனாம்பேட்டை 187 பேரும், தண்டையார்பேட்டையில் 156 பேரும், கோடம்பாக்கம் 156 பேரும், ராயபுரம் மண்டலத்தில் 138 பேரும், அடையாறு 121 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், திரு.வி.க.நகரில் 92 பேரும், அம்பத்தூரில் 79 பேரும், திருவொற்றியூரில் 62 பேரும், வளசரவாக்கத்தில் 52 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், பெருங்குடியில் 45 பேரும், சோழிங்கநல்லூரில் 43 பேரும், மாதவரத்தில் 40 பேரும், ஆலந்தூரில் 40 பேரும், மணலியில் 21 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்
மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:
*ராயபுரம் 6288
*தண்டையார்பேட்டை 5116
*தேனாம்பேட்டை 4967
*கோடம்பாக்கம் 4485
*அண்ணா நகர் 4385
*திரு.வி.க.நகர் 3532
*அடையாறு 2435
*வளசரவாக்கம் 1719
*திருவொற்றியூர் 1545
*அம்பத்தூர் 1519
*மாதவரம் 1135
*ஆலந்தூர் 880
*பெருங்குடி 854
*சோழிங்கநல்லூர் 775
*மணலி 581
தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதேபோல், அண்ணா நகரில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 243 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வட சென்னையை காட்டிலும் கடந்த நில நாட்களாக மத்திய சென்னை பகுதிகளில் தொற்று பரவல் வேகம் தீவிரமடைந்துள்ளது