சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு ; ராயபுரம் - 2,935  மண்டலத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு நாட்களாக, நாள்தோறும் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டி வருகிறது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி மொத்தமாக 23,495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13,170 பேர் குணமடைந்துள்ளனர். 10,138 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 184 பேர் உயிரிழந்துள்ளனர்.


 


இந்நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று மட்டும் இதுவரை கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். 


 


சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் என 13 பேர் உயிரிழந்துள்ளனர். 


 


சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியீடு ;ராயபுரம் மண்டலத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.


 


ராயபுரம் - 2,935 


கோடம்பாக்கம் - 1,867 


தண்டையார்பேட்டை - 1,839