தமிழகத்தில் இதுவரை 877 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் 333 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர். சென்னையில் கடந்த 3 நாட்களில் 10,655 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 144 சட்டத்தை மீறியதாக 10,604 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாஸ்க் அணியாதது உள்ளிட்ட விதிமீறல் தொடர்பாக 35,177 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழக அரசு இந்த ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின் போது வரும் இரண்டு ஞாயிற்றுகிழமைகளிலும் எந்த வித தளர்வுகளும் இன்றி கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு கூறியிருந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பும் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியதாவது; 144 சட்டத்தை மீறியதாக 10,604 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதது உள்ளிட்ட விதிமீறல் தொடர்பாக 35,177 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் நன்றாக ஒத்துழைத்து வருகின்றனர்.