சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்கள் 5 பேர், அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் டாக்டர்கள் 2 பேர் உள்பட 8 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
*பல்லாவரம் நகராட்சி குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் தியாகராயநகரில் செல்போன் கடை நடத்தி வருபவர், தனது கடையில் வேலை பார்ப்பவர்கள் என ஒரே வீட்டில் வசித்த 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் குரோம்பேட்டையில் தனியார் வங்கி ஊழியர்கள் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.
*பம்மல் நகராட்சியில் நேற்று 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் பம்மல், சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் பணி புரிந்து வந்த குன்றத்தூரைச் சேர்ந்த தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
*இந்தநிலையில் அந்த போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த மேலும் 3 தலைமை காவலர்களுக்கும், ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. ஒரே போலீஸ் நிலையத்தில் 5 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
*சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே பனையூரில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் 75 வயது முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து முதியோர் இல்லத்தில் உள்ள மற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 12 பேரும் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை..
சென்னை மண்டலங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு விவரங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதில் ராயபுரம் மண்டலத்தின் பாதிப்பு எண்ணிக்கை 5200-ஐ தாண்டியுள்ளது.
தண்டையார்பேட்டையில் 4000 உயர்ந்துள்ளது. தேனாம்பேட்டையில் 3800 பேரும், கோடம்பாக்கத்தில் 3400 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்
அண்ணா நகர் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை மூன்றாயிரத்து 150 ஆக உயர்ந்துள்ளது. திரு.வி.க.நகரிலும் மூன்றாயிரத்தை நெருங்குகிறது. சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 33 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது. 16,600 பேர் குணமடைந்திருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
அண்ணா நகர் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை மூன்றாயிரத்து 150 ஆக உயர்ந்துள்ளது. திரு.வி.க.நகரிலும் மூன்றாயிரத்தை நெருங்குகிறது. சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 33 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது.