தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 74,622 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 33,675 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் நேற்று மட்டும் 1,358 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 41,357 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் 32,305 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 46 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் நேற்று 1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49,690 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் காணலாம்.
அரியலூர் - 4
செங்கல்பட்டு - 232
கோவை - 43
கடலூர் - 17
தருமபுரி - 6
திண்டுக்கல் - 2
ஈரோடு - 6
கள்ளக்குறிச்சி - 58
காஞ்சிபுரம் - 90
கன்னியாகுமரி - 28
கரூர் - 2
கிருஷ்ணகிரி - 14
மதுரை - 194
நாகை - 17
நாமக்கல் - 6
நீலகிரி - 7
புதுக்கோட்டை - 10
ராமநாதபுரம் - 72
ராணிப்பேட்டை - 53
சேலம் - 111
சிவகங்கை - 7
தென்காசி - 12
தஞ்சை - 25
தேனி - 40
திருப்பத்தூர் - 4
திருவள்ளூர் - 177
திருவண்ணாமலை - 70
திருவாரூர் - 18
தூத்துக்குடி - 37
நெல்லை - 19
திருப்பூர் - 14
திருச்சி - 32
வேலூர் - 148
விழுப்புரம் - 17
விருதுநகர் - 33
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.