விபத்துக்குள்ளான விமானத்தில் 91 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர். இந்தத் 99 பேரில் இருவர் உயிர் பிழைத்துள்ளனர்.

இவர்களில் 92 பேர் உயிரிழந்துள்ளது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஐவரின் உடல்களைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் சிந்து மாகாண சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


விபத்துக்குள்ளான விமானத்தில் 91 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர். இந்தத் 99 பேரில் இருவர் உயிர் பிழைத்துள்ளனர்.


 


இந்த விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அதிக கூட்ட நெரிசல் கொண்ட குடியிருப்புப் பகுதியில் இந்த விமானம் விபத்துள்ளாகியுள்ளது. எனவே பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.


 


சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோக்களிலிருந்து, விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து கரும்புகை சூழ்ந்துள்ளது தெரிகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.


 


விபத்து குறித்த தகவல் வந்தவுடன் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன; எனவே மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து விலகியிருக்குமாறு மக்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


 


பாகிஸ்தானில் ரம்ஜான் விடுமுறையின் முதல் நாளான நேற்று, வெள்ளிக்கிழமை, பலர் தங்கள் குடும்பங்களை காண பயணம் மேற்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.


 


இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து எந்த ஒரு தகவலையும் பாகிஸ்தான் அரசு வழங்கவில்லை.பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமா இந்த விமானம் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. தரையிறங்கும் சிறிது நேரத்திற்குள்ளாக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துள்ளது