இந்தியாவில் நாடு முழுக்க 28,215 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இதுவரை 887 பேர் பலியாகி உள்ளனர். இன்று தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1937 பேருக்கு மொத்தமாக இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. அதிகமாக சென்னையில் இன்று 47 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 570 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று இறப்பு ஒன்றும் இல்லை.
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக தினமும் ஒருவர் அல்லது இருவர் என்ற விகிதத்தில் மரணம் அடைந்து வந்தனர். அதிலும் இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் 35 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் கூட பலியானார். ஆனால் 3 நாட்களுக்கு பிறகு இன்று தமிழகத்தில் யாருமே பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 7176 சாம்பிள்கள் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 94871 சாம்பிள்கள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 41 கொரோனா சோதனை மையங்கள் உள்ளது. இந்தியாவில் தினமும் அதிக கொரோனா சோதனை செய்யும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. நாளை தமிழகம் 1 லட்சம் என்ற எண்ணிக்கையை தொடும் என்பது குறிப்பிடத்தக்கது.