கொரோனாவை முன்னிட்டு நாடு முழுவதும் லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி இன்று இரவு 9 மணிக்கு பொதுமக்கள் மின்விளக்குகளை 9 நிமிடங்கள் நிறுத்த வேண்டும்; அப்போது அகல்விளக்குகள், மெழுகுவர்த்திகள், டார்ச் லைட், செல்போன் லைட் ஆகியவற்றை ஒளிர விடவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்
இதனை ஏற்று இன்று நாடு முழுவதும் 9 மணிக்கு மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு, செல்போன் லைட்டுகள் ஒளிரவிடப்பட்டன அத்துடன் நாட்டின் பல பகுதிகளிலும் இடைவிடாமல் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. பிரதமர் மோடி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்குத்தான் இந்த விளக்கேற்றுதலை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்திருந்தார்ஆனால் பொதுமக்களோ தீபாவளியைப் போல இடைவிடாமல் பட்டாசு வெடித்தனர். தற்போதைய லாக்டவுனால் காற்றின் மாசு குறைந்திருந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இன்று இரவு ஒரே நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் தீபாவளியைப் போல இடைவிடாமல் பட்டாசு வெடித்தனர்.பட்டாசுகள் வெடிக்கப்பட்டதும் சர்ச்சையாகிஉள்ளது.