தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது ... சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டார். .

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன் தினம் தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது.


234 ஆக உயர்வுஇந்த எண்ணிக்கை நேற்று முன் தினம் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தாக்குதல் இருந்தது. நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளாவுக்கு அடுத்தபடியாக 3ஆவது இடத்தில் தமிழகம் முன்னேறியுள்ளது சற்று கவலை தரும் செய்தியாகவே பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.


இந்த நிலையில் நேற்று சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். கடந்த மாதம் நடந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்து 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் 1,1,31 பேர் தமிழகத்திற்கு திரும்பி வந்துள்ளனர். மற்றவர்கள் டெல்லியிலேயே தங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.


110 பேர் எந்த மாவட்டத்தினர்?, *கோவை- 28 நெல்லை- 6 ஈரோடு- 2 தேனி- 20 திண்டுக்கல்- 17 மதுரை- 9 திருப்பத்தூர்- 7 செங்கல்பட்டு- 7 சிவகங்கை- 5 தூத்துக்குடி - 2 திருவாரூர்- 2 கரூர்- 1 காஞ்சிபுரம்- 2 சென்னை- 1 திருவண்ணாமலை - 1. 


சீல் வைப்பு அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நெல்லையும் கோவையும் முதலிடத்தை பிடித்துள்ளன. அதில் நெல்லை மேலப்பாளையத்தில் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதி மற்ற ஊர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது.


யாருக்கு கொரோனா  இந்த நிலையில் நெல்லையில் 29 பேருக்கும், கோவையில் 29 பேருக்கும், சென்னையில் 26 பேருக்கும் ஈரோட்டில் 26 பேருக்கும் தேனியில் 20 பேருக்கும் நாமக்கல்லில் 18 பேருக்கும், திண்டுக்கல்லில் 17 பேருக்கும், மதுரையில் 15 பேருக்கும், செங்கல்பட்டில் 11 பேருக்கும், திருப்பத்தூரில் 7 பேருக்கும் சேலத்தில் 6 பேருக்கும் கன்னியாகுமரியில் 5 பேருக்கும், சிவகங்கையில் 5 பேருக்கும் விழுப்புரம், தூத்துக்குடியில் தலா 3 பேருக்கும், கரூர், திருவாரூர், திருவண்ணாமலையில் தலா 2 பேருக்கும், தஞ்சை, ராணிப்பேட்டை, விருதுநகர், திருப்பூர், காஞ்சிபுரம், வேலூர் தலா ஒருவருக்கும் என மொத்தம் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.