இந்தியாவில், கொரோனா வேகமாக பரவி வருகிறது.தமிழகம் 5-வது  இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 1,596 பாதிகக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில் 635 குணமடைந்துள்ளனர்

இந்தியாவில் 24 மணிநேரத்தில் புதிதாக ஆயிரத்து 329 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 985-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 44 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்த உயிரிழப்பு 603-ஆக உயர்ந்துள்ளது.


 இந்தியாவில், கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியளவில் கொரோனா பாதித்த மாநிலத்தில் தமிழகம் 5-வது  இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 1,596 பாதிகக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில் 635 குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையே, கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  ஊரடங்கை மீறுவோர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் நேற்று மட்டும் 55 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி பொதுமக்கள் அவசியமின்றி வெளியே சுற்றி வருவதால் தான் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதாக பல்வேறு  தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


இதனை தொடர்ந்து, சென்னையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது சட்டப்படி  கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் சென்னை மாநகர  போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.
 தமிழக காவல்துறை அறிக்கை:
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று ஒரே நாளில் 10,226 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7,781 வாகனங்கள்  பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று ஒரே நாளில் 9 ஆயிரத்து 933 வழக்குகள் பதிவு செய்து, 10 ஆயிரத்து 336 பேரை  போலீசார் கைது செசய்தனர். மேலும், போக்குவரத்து விதிகளை மீறியதாக 9 லட்சத்து 69 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையை  பொறுத்தவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 325 வழக்குகள் பதிவு செய்து, பைக் உட்பட 138 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னையில் நேற்று அதிகபட்சமாக 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது.


அதே சமயம் இன்று ஒரே நாளில் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 635 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


நேற்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 54 வயது ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனவால் பலியானோரின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.