டெல்லி மாநாட்டில் தமிழகத்தில் இருந்து சரியாக எத்தனை பேர் கலந்து கொண்டனர் என்று உறுதியாக தெரியவில்லை. இதற்கான விசாரணை நடக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் இது தொடர்பாக முழுமையான எண்களை வெளியிடுவோம். நாம் இன்னும் ஸ்டேஜ் 2ல்தான் இருக்கிறோம். ஸ்டேஜ் 3 செல்லவில்லை. முக்கியமாக SARI என்னும் தீவிர மூச்சு தொற்று (severe acute respiratory infections) இருக்கும் நபர்களுக்கு முதலில் கொரோனா சோதனை செய்கிறோம்.
கடந்த வாரம் பலியான ராமநாதபுரம் நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு முதலில் கொரோனா அறிகுறியே இல்லை. ராமநாதபுரம் நபர் கடைசி நேரத்தில்தான் மருத்துவமனை கொண்டு வரப்பட்டார். அவர் மருத்துவமனை வந்து 30 நிமிடத்தில் பலியாகிவிட்டார். மிக மோசமான உடல்நிலையுடன் அவர்கொண்டு வரப்பட்டார். அவரின் உடல் முறையாக அடக்கம் செய்யப்பட்டது. இதற்கான அறிவுரை வழங்கப்பட்டது.
கொரோனாவை கணிக்க முடியாது. முதலில் அறிகுறி இல்லாமல் இருக்கிறார்கள். நன்றாக இருக்கிறார்கள். பேசிக்கொண்டே இருக்கும் போதே ஏதாவது நடக்கிறது. இரண்டு மணி நேரத்தில் எல்லாம் மாறுகிறது. வெறும் 2 மணி நேரத்தில் மூச்சு திணறல் வந்து பலியாகிறார்கள். முதலில் பரிசோதனை செய்யும்போது கொரோனா இல்லை என முடிவு வருகிறது, ஆனால் 28 நாட்களில் மீண்டும் பரிசோதனை செய்து பார்த்தால் பாசிட்டிவாக மாறுகிறது
கொரோனா பரவ 28 நாட்கள் வரை காலம் இருக்கிறது. இது அதன் கருவுறும் காலம் ஆகும். 28 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் ஒரு நபருக்கு பாசிட்டிவ் என்று ரிசல்ட் வர வாய்ப்புள்ளது. ஒருமுறை நெகட்டிவ் என்று வந்தால் அவர்களை விட்டுவிட முடியாது. 28 நாட்களுக்குள் மீண்டும் கொரோனா வர வாய்ப்புள்ளது. அவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்படுகிறதா என்று தீவிரமாக கண்காணிக்க வேண்டும், இதுதான் சிரமம் என்று பீலா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்