சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. குறிப்பாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டு வர உலகம் முழுவதும் முயற்சித்து வருகின்றன. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
சீனாவை தொடர்ந்து இந்தியாவில் டெல்லியிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. டெல்லியில் 31 பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக விமான நிலைய மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கொரோனா அறிகுறி உள்ள சிறுவனை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு விமான நிலைய மருத்துவக்குழுவினர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தனிமைபடுத்தி தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
ஓமனில் இருந்து தமிழகம் திரும்பிய காஞ்சீபுரம் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் சென்னை அரசு மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 80க்கும் கூடுதலான நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவுக்கு அடுத்து தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இதன் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. ஈரானின் தெஹ்ரான், குவாம், கிலான் மற்றும் எஸ்பஹான் ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன.
ஈரானில் நேற்று ஒரே நாளில் 21 பேர் பலியாகினர். 1,076 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 145 ஆகவும், பாதிப்பு எண்ணிக்கை 5,823 ஆகவும் இருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தேக அடிப்படையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி கியானவுஷ் ஜஹான்பூர் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் 49 பேர் வைரஸ் பாதிப்பிற்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 194 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோன்று ஐரோப்பிய நாடுகளுக்கு விமானங்கள் செல்வதற்கு ஈரான் ஏர் நிறுவனம் தற்காலிக தடை விதித்து உள்ளது.
சென்னை.
சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.