கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களின் முன் தோன்றினார்
அப்போது அவர் கூறுகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு விதிக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்தார்.
இதனிடையே அத்தியாவசிய பொருட்களை விற்பதற்கு நேரம் விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி காய்கறி, பழக்கடைகள் காலை 6 மணி முதல் காலை 9மணி வரை திறந்திருக்கும். உணவகங்களில் காலை சிற்றுண்டி காலை 7 முதல் 9 வரை விற்கலாம். ஓட்டல்களில் மதிய உணவு பிற்பகல் 12 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கிடைக்கும். இரவு உணவு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கிடைக்கும் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் முதல்வர் தற்போது சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் அத்தியாவசிய பொருட்களுக்கான நேரம் ஒதுக்கீட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் நாள் முழுவதும் திறந்திருக்கும். தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அது ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்...
ஸ்க்ரீன் செய்யப்பட்ட பயணிகள்- 2,09,284, தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் படுக்கைகள்- 13,727, வென்டிலேட்டர்கள்: 2,464, தற்போதைய சேர்க்கை- 284, சோதிக்கப்பட்ட மாதிரிகள் - 1039 (எதிர்மறை -933, நேர்மறை- 26 (1 டிஸ்சார்ஜ்), பரிசோதனையின்கீழ்- 80) உள்ளன. இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
அதாவது, தற்போது, 26 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதேநேரம், லாக்டவுன் தற்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு முன்பு நோய் தொற்று இருந்தவர்களுக்கு நோய் பாதிப்பு அறிகுறி தெரிய 14 நாட்களாவது தேவைப்படும் என்பதால், தொடர்ந்து மக்கள் தங்கள் உடல்நிலையை கண்காணித்து வருவது முக்கியமானது. வெளியுலக தொடர்பை துண்டிப்பது மிகவும் அவசியம்.