கொரோனா வைரஸ்க்கு இதுவரை எந்த மருந்து மற்றும் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கவில்லை. வல்லரசு நாடுகள் அனைத்தும் கொரோனவைத் தடுக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் கைசர் பெர்மனெட் வாஷிங்டன் ஆராய்ச்சி நிறுவனம் முதல்கட்டமாக பெண் தன்னார்வலருக்கு கையில் தடுப்பூசி ஒன்றை சோதனை முயற்சியாக போட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவுக்காக ஆராய்ச்சியாளர்கள் காத்து உள்ளனர்.
இந்த சோதனையின் முடிவு விரைவில் தெரிய வரும் அதன் பின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்படும் என்று கொரோனா தடுப்பூசி ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.