தமிழகத்தில் மக்களின் சுய ஊரடங்கை நாளை காலை 5 மணி வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் தொடர தடை இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சுய ஊரடங்கை கடைபிடிக்க, பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். இந்த அறிவுறுத்தலை நாடு முழுவதும் பொதுமக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
இந்தநிலையி்ல், தமிழகத்தில் மக்களின் சுய ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கு மேலும் 8 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அத்தியாவசிய பணிகள் தொடர எந்த தடையும் இல்லை எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது