இந்தியா முழுவதும் 80 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகியவற்றில் ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ஆம் தேதி வரை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் காய்கறி, பால், இறைச்சி, மளிகைக் கடைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா அச்சத்தால் ஈரோடு - நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதிகள் மூடப்பட்டன. ஆனால் சென்னையிலிருந்து இன்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டதால் பலர் கூட்டத்தில் முண்டியடித்துச் சென்றனர்.
ஏற்கெனவே தமிழ்நாட்டு எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பிற மாநில வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. மிக அத்தியாவசிய காரணங்கள் தவிர்த்து வேறு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த, நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் படி, சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து மற்றும் பொது மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, தொற்று நோய்கள் சட்டம் 1892ல் ஷரத்து 2ன் படி மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தொடங்கி மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தீவிரமாக அமல்படுத்த 144 சட்டப்பிரிவின் கீழ் ஆட்சியர், காவல் ஆணையர்களுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது
நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தொடங்கி மார்ச் 31 வரை. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஊரடங்கு உத்தரவு 144....