டைமண்ட் பிரின்ஸஸ்` என்னும் கப்பலில் 200க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கப்பலில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோவில், இதுவரை இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், ஆனால் தங்களை ஒன்றாக வைத்திருந்தால் தங்களுக்கும் தொற்று வர ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தங்களுக்கு உதவி வேண்டும் என்று பேசும் அவர், தங்களுக்கு நோய் பாதிப்பு வருவதற்குள் தங்களை காக்குமாறு அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் ஹாசன், நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் குமார் இது தொடர்பாக பேசி தங்களை மீட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பானின் யோக்கோஹோமா துறைமுகத்தில் டைமண்ட் பிரின்சஸ் என்னும் கப்பல் கடந்த 9 தினங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கப்பலில் உள்ள 3500 பேரில் (டைமண்ட் பிரின்ஸஸ்` என்னும் கப்பலில் 200க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது) கொரோனா பாதிப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் கப்பலில் உள்ளவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை,"
"கப்பலில் உள்ளவர்களில் அன்பழகன் என்பவர் மதுரையை சேர்ந்தவர், கப்பலில் பணியாற்றும் அந்த ஊழியர் தனது நண்பர்களுக்கு வாட்சப் செய்தி அனுப்பியுள்ளார், அதில் சுமார் 100 இந்தியர்கள் அந்த கப்பலில் இருப்பதாகவும் அதில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். எனவே இதில் தாங்கள் தலையீட்டு இந்திய ஊழியர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர வேண்டும்," என்று ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்