கொரோனாவுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.  தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  சென்னையில் 10, திருச்சி, ராமநாதபுரத்தில் தலா ஒருவர் என 12 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

சென்னை ராஜிவ்  மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 பேரிடம் கொரோனாவுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.  தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 


சீனாவில் இருந்து சீனா குடிமக்கள் மற்றும் சீனாவில் தங்கி இருக்க கூடிய வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு வரக்கூடிய இ-விசா முறையை தற்போது தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்க முடிவு எடுத்துள்ளது. கொரோனா நோய்  தொற்று பரவாமல் இருக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது,சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் சீனாவில் வசிக்கும் பிற நாட்டவர்கள் இ-விசாக்கள்  மூலம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னையின் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்த கூட்டம் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்  செய்தியாளர்களை பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்  என்றார். சீனாவிலிருந்து வந்த 649 பேர் உட்பட 799 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை ராஜிவ்  மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 பேரிடம் கொரோனாவுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. தமிழகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ள 12 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி எதுவும் இல்லை.
இது தவிர திருச்சி மற்றும் ராமநாதபுரத்தில் சிகிச்சை பெறும் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. சென்னையில் 10, திருச்சி, ராமநாதபுரத்தில் தலா ஒருவர் என 12 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். 1,642 மருத்துவர்களுக்கான  கெரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தயாராக உள்ளன. இதுவரை விமானநிலையங்களில் 5,543 பயணிகளிடம் தீவிரமாக பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் 5 பேரின் மாதிரி ஆய்வுக்காக  அனுப்பப்பட்டுள்ளது. புனே ஆய்வகத்துக்கு 4 மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. கிங் இன்ஸ்ட்டியூட்டில் 48 மணிநேரத்தில் ஆய்வறிக்கையை பெற முடியும் இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்  உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மருத்துவர்கள் பங்கேற்றனர்.