இந்திய தயாரிப்பு ஒன்று தைவான் ஜனாதிபதியின் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தலைமையில், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் உலக அளவில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. அத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்நிறுவனத்தின் வாகனங்கள் இந்தியாவிற்கும் பெருமை தேடி தந்துள்ளன. இந்த வகையில் மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று தற்போது இந்தியாவிற்கு மற்றொரு பெருமையை தேடி தந்துள்ளது.


தேர்தலை முன்னிட்டு, தைவான் ஜனாதிபதியின் பிரச்சாரத்தில், மஹிந்திரா ஸ்கார்பியோ பிக்அப் டிரக் (Mahindra Scorpio Pickup Truck) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தயாரிப்பு ஒன்று தைவான் ஜனாதிபதியின் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.


தனது நிறுவனத்தின் ஸ்கார்பியோ பிக்அப் டிரக், தைவான் ஜனாதிபதியின் பிரச்சார கான்வாயில் சேர்க்கப்பட்டிருக்கும் விஷயம் தெரிந்ததும் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.



இது பெருமை கொள்ள வேண்டிய தருணம் என ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த செய்தியை தனக்கு தெரியப்படுத்தியதற்காக இன்வெஸ்ட் இந்தியா - தைவானுக்கும் (Invest India -Taiwan) அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.