சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 132 பேர் பலியாகி உள்ளனர்.கொரோனா வைரஸை பிசாசு என வர்ணித்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், "அந்த பிசாசை வீழ்த்துவோம்" என சூளுரைத்துள்ளார்.
கொரோனா வைரஸ்
1. இந்நிலையில், சீன நாட்டிற்கு செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
2.கொரோனா வைரஸ் தொடர்பாக பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3.மேலும் பல விமான சேவை நிறுவனங்களும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
4.யுனைட்டட் ஏர்லைன்ஸ் மற்றும் கேத்தே பசிஃபிக் விமான நிறுவனங்கள் சீனாவிற்கான விமான சேவைகளை குறைத்துள்ளன. அதே நேரத்தில் லயன் ஏர் நிறுவனம், சீனாவிற்கு விமான சேவையை மொத்தமாக நிறுத்தியுள்ளது.