நித்யானந்தா தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவர் உள்நாட்டில் இருக்கிறாரா? வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டாரா என்பதுகூட உறுதியாகத் தெரியவில்லை.குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளை கடத்தி சென்றதாக அவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அகமதாபாத் டெல்லி பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் இருந்த அவரது ஆசிரமம் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் இந்துக்களுக்கு என்று தனி நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
'கைலாசா' என்று அவர் தமது நாட்டுக்குப் பெயர் வைத்துள்ளதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. தாம் அமைத்துள்ளதாக நித்யானந்தா குறிப்பிடுகிற நாட்டுக்கான 'அதிகாரபூர்வ' இணைய தளம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனி நாடு அறிவித்து, கொடி, துறைகள் ஆகியவற்றையும் அறிவித்துள்ளார் காவி. அது தீவா அல்லது... மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
தென்அமெரிக்க நாடான ஈக்வடார் நாட்டில் தனி தீவு வாங்கியுள்ள நித்யானந்தா அதை எல்லைகள் அற்ற தனிநாடாக பிரகடனம் செய்துள்ளார்.அந்த நாட்டை இந்து நாடாக அறிவித்துள்ளதுடன், இந்துக்கள் இங்கு வரலாம் என்று அறிவித்துள்ளார்.அந்த நாட்டிற்கு என தனி பாஸ்போர்டையும் வெளியிட்டுள்ளார். அந்த நாட்டிற்கு கைலாயம் என்று பெயரிட்டுள்ளார். ஆனால் இதெல்லாம் உண்மையா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அரசு ரீதியான தகவலும் கிடைக்கப்பெறவில்லை.