டெல்லியில் போராட்டத்தில் 3 பேருந்துகளுக்கு தீ வைத்தது தாங்கள் அல்ல என்று ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மறுப்பு ..

இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியின் தெற்கு பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அங்குள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் பங்கெடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதுடன், தடியடியும் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


சம்பவம் நடந்தேறிய, தெற்கு டெல்லியில் உள்ள நியூ பிரெண்ட்ஸ் காலனியை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் கடந்த 2 நாட்களாக டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று அந்த போராட்டமானது வன்முறையாக வெடித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி கடந்த 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய முஸ்லீம் அல்லாத சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமையை அளிப்பதற்கு வகை செய்யும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் கடந்த வியாழக்கிழமையன்று ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்த நிலையில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்போது இந்த போராட்டமானது நாடு தழுவிய அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. டெல்லியை பொறுத்தவரை ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினார்கள். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. வருகின்ற 5ஆம் தேதி வரை அந்த பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் போராட்டத்தில் 3 பேருந்துகளுக்கு தீ வைத்தது தாங்கள் அல்ல என்று ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 3 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொடர்பு என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.தீீ வைத்தது யார்?