பாஜக எம் பி பிரக்யா தாக்கூர் தீவிரவாதி..ராகுல் காந்தி

பாஜக எம்பி பிரக்யா தாக்கூர், கோட்ஸே ஒரு தேச பக்திமான். நீங்கள் ஒரு தேச பக்திமானை பற்றி இங்கு எடுத்துக்காட்டு கொடுத்து பேச கூடாது. அது மிகவும் தவறு என்று லோக்சபாவில் குறிப்பிட்டார். இதனால் அவையில் பெரிய சர்ச்சை உருவானது. திமுக எம்பி ஆ. ராசாவின் பேச்சுக்கு இவர் இப்படி பதில் அளித்தார்.


இந்திய அரசியலில் கடந்த இரண்டு நாட்களாக இது பெரிய சர்ச்சையானது. இவரின் பேச்சுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்




இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்த கருத்தில், ஒரு தீவிரவாத பிரக்யா தாக்கூர் இன்னொரு தீவிரவாதி கோட்சேவை, தேச பக்திமான் என்று அழைக்கிறார். இந்திய பாராளுமன்ற வரலாற்றில் வருத்தமான நாள், என்று டிவிட் செய்து இருந்தார்.