டெல்லி: விடுதலை புலிகள் மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு டெல்லி தீர்ப்பாயம் நீட்டித்தது. விடுதலை புலிகள் மீதான தடையை கடந்த 2014-ம் ஆண்டு 5 ஆண்டுகளுக்கு நீதிமன்றம் நீட்டித்திருந்தது. இந்நிலையில் விடுதலை புலிகள் மீதான தடை முடிந்ததை அடுத்து மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு தற்கொலைபடையினரால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியா முழுவதும் தடைவிதித்து, அதனை சட்டவிரோத இயக்கமாக அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை மத்திய அரசு அறிவிப்பு