" இயேசு காவியம் " பேச்சுவாக்கிலே துவக்கிய ஒருமுயற்சி,கலைக்காவிரியின் சார்பில் தந்தையார் என்னைச் சந்தித்து பேசிய பொழுதும் திரு சந்திரமோகன் என்னை விடாப்பிடியாகக் குற்றாலத்திற்குக் கூட்டிச் சென்றபோதும் இது ஏதோ ஓரிரு நாள் வேலை என்றே நான் எண்ணியிருந்தேன். ஆனால், வேலை செய்ய உட்கார்ந்தபொழுது பயம் என்னைப்பிடித்த! "என்னபிரம்மாண்டமான வேலையில் நாம் கை வைத்து விட்டோம்'என்று பீதியடைந்தேன். இயேசு பெருமான் அருள் பாவித்தார் ! நான் இதுவரை உழைக்காத வகையில் தொடர்ந்து பதினைந்து நாட்கள், தினமும் எட்டு மணி நேரம் வேலை செய்து இதை முடித்தேன் என்றால், அது அவரது கருணையே ! பலவித சந்தங்களில். சில பகுதிகளை இசை அமைப்புக்கு ஏற்றவாறும்கூட காவியத்தை அமைத்திருக்கிறேன். கூடவே இருந்து விளக்கங்கள் தந்துதவிய அருள்திரு தந்தையார் ஸ்தனிஸ்லாஸ்.ஜார்ஜ் ஆகியோரின் உதவியை நான் என்றும் மறக்க இயலாது. ஒரு பெரும் ஞான சேவையைச் செய்துவிட்டோம் என்ற ஆத்ம திருப்தியை அவர்கள் எனக்குத் தந்திருக்கிறார்கள். பல சமயங்களில் பலர் என்னை இறைவாக் காவியம் ஒன்று எழுதுங்கள் என்று வற்புறுத்தியதுண்டு. அந்த இறைவாக் காவியம் ' இயேசு காவியம் ' தான் என்று நான் உறுதியாக் கூறமுடியும். என்று 'இயேசு காவியம்' என்ற நற்செய்தியை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் காவிய வடிவில் அவரே எழுதியதை நான் வாசித்த பிறகு சங்கீதம் 119:105 ல் "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும்,என் பாதைக்கு வெளிச்சமுமாய்யிருக்கிறது. தேவனுடைய வார்த்தை நிச்சயம் கவிஞர் கண்ணதாசன் உள்ளத்தை தொட்டுஇருக்கிறது என்பதை கவிஞரின்'என்னுரை 'எழுத்து மூலமாய் அறிகிறோம்
கவிஞர் கண்ணதாசனின் உள்ளத்தை தொட்ட பரிசுத்த வேதாகமம்