இது குறித்து கூறப்படுவதாவது: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த இருகூர் அருகே ராவுத்தர் பாளையம் பகுதியில் அந்த வழியாக வந்த ஆழப்புழா -சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சம்பவத்தில் மாணவர்கள் 4 பேரும் பலியாயினர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸ் விசாரணையில் பலியான மாணவர்கள் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவருபவர்கள் எனவும், நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த போது ரயில் மோதி பலியாகினர் போலீசார் தெரிவித்துள்ளனர். பலியான மாணவர்கள் கொடைக்கானல் சித்திக் ராஜா, நிலக்கோட்டை ராஜசேகர், ராஜபாளையம் கவுதம், கருப்பசாமி என தெரிகிறது.இறந்த மாணவர்களின் உடலை கைப்பற்றி போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
குடி குடியை கெடுக்கும் குடி மாணவர்கள் உயிரைக் கெடுத்துவிட்டதுடு