*கிறிஸ்தவம் என்பது மார்க்கமா அல்லது மதமா?*
*அநேகர் தங்களை கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்*
மதத்திற்கும் மார்க்கத்திற்கும் என்ன வேறு பாடு இருக்கிறது?
*மதத்தில் என்ன இருக்கிறது?*
1)இதில் பல கடவுள் இருக்கிறார்கள்
2)பல ஜாதிகள் இருக்கிறது
3)மனுஷனுக்குள்ளே ஏற்ற தாழ்வுகள் இருக்கிறது
4)மதத்திற்கு என்று எந்த நித்திய நோக்கமும் இருப்பதில்லை
5)இதில் சுய ஒழுக்கம் என்பதை பார்க்க முடியாது
6)மதத்தின் வழி எங்கே போய் முடியும் என்று யாருக்கும் தெரியாது
7)மதத்தை வைத்தே அநேக தொழில்கள் பிரித்து வைக்கப்பட்டு இருக்கிறது
8)இதில் பாவ மன்னிப்பையோ இரக்கத்தையோ பார்க்க முடியாது
9)மதத்தில் எப்படி கடவுளை தொழுது கொள்ள வேண்டும் என்கிற விதி முறைகள் இல்லை
10) மறுமையின் நம்பிக்கை இதில் தெளிவாக சொல்லப்பட்டு இருக்காது
*கிறிஸ்தவ மார்க்கம் என்பது என்ன?*
1)மார்க்கம் என்பது நித்தியதை அடைவதற்கான ஒரே வழியாக இருக்கிறது
2)ஒன்றான மெய் தேவன் யார் என்பதை தெளிவாக நாம் கற்றுக் கொள்ள வேண்டும்
3)இதில் ஜாதிகள் என்பது இல்லை ஏனென்றால் எல்லாரும் பரிசுத்த ஜாதிகள்
4)இங்கே ஏற்ற தாழ்வுகள் என்பது இல்லை
5)நித்தியத்திற்கு போகிற வழி தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது
6)ஒன்றான மெய் தேவனை எப்படி தொழுது கொள்ள வேண்டும் போதிக்கிறது
7)கிறிஸ்துவின் மூலம் பாவ மன்னிப்பையும் இரக்கத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்
8)இந்த மார்க்கத்தில் இருக்கிறவர்கள் எல்லாரும் ஆசாரியர்களாய் இருக்கிறார்கள் ஆதலால் தேவனை யார் வேண்டுமானாலும் தொழுது கொள்ள முடியும்
அநேக கிறிஸ்தவர்கள் மதத்தில் இருக்கிறார்கள்
கிறிஸ்தவ மதத்தில் இருக்கிறவர்கள் கிறிஸ்தவர்களே இல்லை
ஏனென்றால் *அவர்கள் இன்னும் உலகத்தில் தான் இருக்கிறார்கள்*
மெய்யான கிறிஸ்தவர்களே *மார்க்கத்தில் இருக்கிறார்கள்* ஏனென்றால் அவர்கள் உலகத்தில் இருந்து *பிரித்து எடுக்கப்படவர்களாய் இருக்கிறார்கள்*
நம்முடைய வேதாகமத்தில் தேவன் கிறிஸ்தவத்தை என்னவென்று அழைக்கிறார் என்று பார்ப்போம்
*கிறிஸ்தவத்தை மதம் என்று தேவன் ஒருபோதும் அழைக்கவில்லை அதை அவர் மார்க்கம் என்று தான் அடையாளப்படுத்துகிறார்*
*மார்க்கம் என்றால்* *வழி(பாதை) என்று* *அர்த்தம்*
*அந்த வழி யார்?*
Joh 14:6 அதற்கு இயேசு: *நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்;* என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
*கிறிஸ்தவம் மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது*
Act 19:9 சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த *மார்க்கத்தை நிந்தித்தபோது*, ,,,
Act 22:4 நான் *இந்த மார்க்கத்தாராகிய* புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி,,
Act 24:22 *இந்த மார்க்கத்தின்* விஷயங்களை விவரமாய் அறிந்திருந்த பேலிக்ஸ் ....
Act 25:19 தங்களுடைய *மார்க்கத்தைக்குறித்தும்*, ....
*கிறிஸ்தவம் தேவனுடைய மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது*
Luk 20:21 ,,,... *தேவனுடைய மார்க்கத்தைச்* சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்.*
Act 18:26 ,,,, *தேவனுடைய மார்க்கத்தை* அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள்.
*கிறிஸ்தவம் ஜீவ மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது*
Act 2:28 *ஜீவமார்க்கங்களை* எனக்குத் தெரியப்படுத்தினீர்; ,,,
*கிறிஸ்தவம் கர்த்தருடைய மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது*
Act 18:25 அவன் *கர்த்தருடைய மார்க்கத்திலே* உபதேசிக்கப்பட்டு, ,,,,
*கிறிஸ்தவம் சத்திய மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது*
2Pe 2:2 ,,, அவர்கள் நிமித்தம் *சத்தியமார்க்கம்* தூஷிக்கப்படும்.
*கிறிஸ்தவம் நீதியின் மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது*
2Pe 2:21 அவர்கள் *நீதியின் மார்க்கத்தை* அறிந்தபின்பு ,,,,
*கிறிஸ்தவம் புதிதும் ஜீவனுமான மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது*
Heb 10:19 ,,,,புதிதும் *ஜீவனுமான மார்க்கத்தை* நமக்கு உண்டுபண்ணினபடியால்,
*இந்த மார்க்கத்தில் நாம் எப்படி சேர வேண்டும்?*
Joh 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; *என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.*
Heb 10:19 ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு *இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,*
Heb 10:20 *அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு* அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
Heb 10:21 தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,
Heb 10:22 *துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.*
*ஆகையால் கிறிஸ்தவம் என்பது மதம் அல்ல அது தேவனுடைய மார்க்கமாக(வழி) இருக்கிறது*
நாம் கிறிஸ்தவ மார்க்கத்தை சார்ந்தவர்கள்