முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி தமிழ்நாட்டில், 1 கோடியே 6 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத்தொகை
இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை பெற்றுள்ள மகளிருக்கு முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.
அன்பு சகோதரிக்கு வணக்கம்' . மகளிருக்கு குறுஞ்செய்தி அனுப்பி முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
அந்த குறுஞ்செய்தியில்,
'அன்பு சகோதரிக்கு, வணக்கம்!
மகளிரின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்", தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். வாழ்த்துகள்!
இன்று முதல் மாதம்தோறும் கிடைக்கும் ரூ. 1000 உதவித்தொகை அல்ல. தங்களின் உரிமைத்தொகை! நன்றி.
உங்களில் ஒருவன், மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்